ADDED : ஜூன் 12, 2024 06:57 AM
ஓசூர் : ஓசூர், அலசநத்தம் சாலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி மகள் ரக்சிதா, 25; கடந்த, 8 இரவு, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தந்தை புகார்படி, ஹட்கோ போலீசார் ரக்சிதாவை தேடி வருகின்றனர்.
அஞ்செட்டி அடுத்த பதிகவுண்டனுார் அருகே கல்லுப்பள்ளத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 21, கூலித்தொழிலாளி; கடந்த, 2ல் காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் லட்சுமணன், 23, புகார்படி, அஞ்செட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூரை சேர்ந்த, 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு முடித்துள்ளார்; நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் வசிக்கும், விசாகப்பட்டணத்தை சேர்ந்த வஜ்ரபோ கணேஷ், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.