/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 14 நாளே ஆன பெண் குழந்தை கொலை: கொடூர தந்தை கைது 14 நாளே ஆன பெண் குழந்தை கொலை: கொடூர தந்தை கைது
14 நாளே ஆன பெண் குழந்தை கொலை: கொடூர தந்தை கைது
14 நாளே ஆன பெண் குழந்தை கொலை: கொடூர தந்தை கைது
14 நாளே ஆன பெண் குழந்தை கொலை: கொடூர தந்தை கைது
ADDED : ஜூலை 06, 2024 02:50 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்தவர் மாதையன், 46; கூலித்தொழிலாளி. இவரது இரண்டவது மனைவி சின்னம்மா, 38. இவர்களுக்கு, 12 வயதில் மகன், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் கர்ப்பமடைந்த சின்னம்மாவிற்கு, 14 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரமடைந்த மாதையன் குழந்தையை கொன்று விடலாம் எனக் கூறியுள்ளார்.
இதற்கு சின்னம்மா மறுப்பு தெரிவிக்கவே, அவரிடம் தகராறில் ஈடுபட்டு குழந்தையை துாக்கியபடி வீட்டில் இருந்து வெளியே ஓடினார். அதிர்ச்சியடைந்த சின்னம்மா, அப்பகுதியை சேர்ந்த சிலருடன் குழந்தையை தேடியபோது, வீட்டின் அருகே உள்ள பாறையில் குழந்தையை அசைவின்றி கிடந்தது.
குழந்தையை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சின்னம்மா புகாரின்படி, கெலமங்கலம் போலீசார், மாதையனை நேற்று பிடித்து விசாரித்தனர். அவர் குழந்தையை அடித்து கொன்றது தெரிந்ததால், அவரை கைது செய்தனர்.