/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம் ரூ.1.06 கோடி பண மோசடி ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம் ரூ.1.06 கோடி பண மோசடி
ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம் ரூ.1.06 கோடி பண மோசடி
ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம் ரூ.1.06 கோடி பண மோசடி
ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம் ரூ.1.06 கோடி பண மோசடி
ADDED : ஜூன் 15, 2024 01:58 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார், காந்தி நகரைச் சேர்ந்தவர் சபரிநாதன், 65; ஓய்வுபெற்ற ஆடிட்டர். இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு, ஏப்., 11ல் ஒரு 'யு.ஆர்.எல்.,' லிங்க் வந்தது. அதில், 'நாங்கள் அனுப்பியுள்ள லிங்க்கில் உள்ள கம்பெனி பொருட்களை, 'ஸ்டாக் டிரேடிங்' செய்தால் அதிக லாபம் கிடைக்கும்' என, இருந்தது.
நம்பிய சபரிநாதன், 'லிங்க்'கிலிருந்து 'மொபைல் ஆப்' பதிவிறக்கம் செய்து, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினார். சில நாட்களில் அதிக லாபம் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குகளில், நான்கு தவணைகளாக 1 கோடியே, 6 லட்சத்து, 50,000 ரூபாய் அனுப்பினார்.
அதன்பின் அவரது இணையதள பக்கங்கள் முடங்கின. அவரை தொடர்பு கொண்ட எண்கள் அனைத்தும் 'சுவிட்ச் ஆப்' ஆகின. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன், நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். கிருஷ்ணகிரி 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.