ADDED : ஜூன் 25, 2025 01:33 AM
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஏ.புதுார் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் மனைவி லட்சுமி, 26. கடந்த ஏப்., 21ம் தேதி, சூளகிரி அருகே கானலட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்ல வேண்டும் என கணவரிடம் கேட்டார்.
அதற்காக அன்றைய தேதியில் மனைவியை அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டிற்கு கொண்டு சென்று கோவிந்தசாமி விட்டார். ஆனால் சகோதரி வீட்டிற்கு செல்லாத லட்சுமி, திரும்பியும் வரவில்லை. கணவர் புகார்படி, அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.