Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓராண்டுக்கு பின் கெலவரப்பள்ளி அணை வரும் 10ல் திறக்க தமிழக அரசு உத்தரவு

ஓராண்டுக்கு பின் கெலவரப்பள்ளி அணை வரும் 10ல் திறக்க தமிழக அரசு உத்தரவு

ஓராண்டுக்கு பின் கெலவரப்பள்ளி அணை வரும் 10ல் திறக்க தமிழக அரசு உத்தரவு

ஓராண்டுக்கு பின் கெலவரப்பள்ளி அணை வரும் 10ல் திறக்க தமிழக அரசு உத்தரவு

ADDED : ஜூலை 07, 2024 05:58 AM


Google News
ஓசூர் : ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கடந்தாண்டு இருபோக பாசனத்-திற்கு திறக்கப்படாத நிலையில், நடப்பாண்டு வரும், 10ல் பாச-னத்திற்கு திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணையின், 7 மதகுகளின் ஷட்டர்கள் மற்றும் ஒரு மணல் போக்கி ஷட்டர் ஆகியவற்றை, அணை பாதுகாப்பு புனரமைப்பு திட்டத்தில், 26 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றும் பணி கடந்தாண்டு ஜூன், 24ல், நீர்வளத்துறை மூலம் துவங்கப்பட்டது.

அதேபோல், மதகுகளை திறப்பதற்கு பயன்படும் பாலம் சீரமைப்பு பணி, பாலத்திற்கு அடியில் மற்-றொரு பாலம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இப்-பணிகளால் கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் போக பாசனத்-திற்கும், கடந்த பிப்., மாதம் இரண்டாம் போக பாசனத்துக்கும் நீர் திறக்கப்படவில்லை. அதனால், 8,000 ஏக்கர் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறின. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி, 450 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 450 கன அடிநீர் திறந்து விடப்பட்டது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 42.31 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.அணை ஷட்டர் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நடப்பாண்டு முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என, பாசன விவ-சாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று வரும், 10ல் நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அணையில் இருந்து வலது கால்வாயில், 26 கன அடி, இடது கால்வாயில், 62 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சி-யடைய செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us