/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.12.14 லட்சம் உண்டியல் வசூல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.12.14 லட்சம் உண்டியல் வசூல்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.12.14 லட்சம் உண்டியல் வசூல்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.12.14 லட்சம் உண்டியல் வசூல்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.12.14 லட்சம் உண்டியல் வசூல்
ADDED : மார் 12, 2025 07:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சமேத சுப்பிரம-ணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம், 11ல் தைப்பூச திருவிழா நடந்தது. இதையடுத்து, கோவிலில் ஹிந்து சமய அறநிலைத்-துறை சார்பில் வைத்திருந்த, 4 தற்காலிக உண்டியல் மற்றும், 7 நிரந்தர உண்டியலில் இருந்த காணிக்கைகள் நேற்று எண்ணப்பட்-டன. ஹிந்து சமய அறநிலையத்துறை, கிருஷ்ணகிரி உதவி ஆணையர் ராமுவேல் முன்னிலையில், கோவில் பரம்பரை அறங்-காவலர் கிருஷ்ணசந்த் கோவில் உண்டியல்களை திறந்தார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் கவிப்பிரியா, போச்சம்பள்ளி சரக ஆய்வாளர் ராம-மூர்த்தி, கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோவில் செயல் அலுவலர் சித்ரா ஆகியோர் உண்டியல் எண்ணும் பணிகளை பார்வையிட்டனர். இதில், போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறி-வியல் கல்லுாரி மாணவர்கள், 25க்கும் மேற்பட்டோர், உண்-டியலில் இருந்த காணிக்கைகளை எண்ணினர். யுகோ வங்கி பணியாளர்கள் காணிக்கைகளை இயந்திரம் மூலம் கணக்கிட்-டனர். அதன்படி, 11 உண்டியல்களில், 12.14 லட்சம் ரூபாய், 16 கிராம் தங்கம், 470 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். நிகழ்ச்சிகள் முழுவதையும் ஹிந்து சமய அறநிலயத்துறை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர். கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.