/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் சொற்பொழிவில் தகவல் புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் சொற்பொழிவில் தகவல்
புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் சொற்பொழிவில் தகவல்
புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் சொற்பொழிவில் தகவல்
புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் சொற்பொழிவில் தகவல்
ADDED : ஜூலை 07, 2024 05:56 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தார்.
இதில், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பன்னீர்-செல்வம் பேசியதாவது: மாணவர்கள் தங்கள் பள்ளி முதல் கல்-லுாரி பருவம் வரை மட்டுமே, தங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள முடியும். அதற்கு உதவும் வகையில், நுாலகங்களில் பல்-வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த புத்தகங்களை படிக்க படிக்கத்தான் அறிவு வளரும். அதை மேடைகளில் பேசி மேம்படுத்தி கொள்ள வேண்டும். பல்வேறு தலைப்புகளில் பேசும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை-யுடன், மொழி சார்ந்த அறிவும் வளரும். இவ்வாறு பேசினார்.
நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்-வாளர் மாதேஸ்வரன், துாய்மை இந்தியா இயக்க பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள்,
வாசகர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.