/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூரில் 171 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் ஓசூரில் 171 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
ஓசூரில் 171 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
ஓசூரில் 171 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
ஓசூரில் 171 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
ADDED : ஜூலை 06, 2024 06:36 AM
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தர்காவில் இருந்து ஜூஜூவாடி வரை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 25 இடங்களில், 85 சிசிடிவி கண்கா-ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், அடை-யாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்து மற்றும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து பிடிக்க போலீசா-ருக்கு உதவியாக உள்ளது.
அதேபோல் பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஜூஜூவாடி முதல் அண்ணாமலை நகர் வரை, 66 இடங்களில், 171 சிசிடிவி கேமராக்கள், 12 தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்-னார்வலர்கள் உதவியுடன், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்-கப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை, சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டேஷனில் இருந்தவாறே, 171 கண்காணிப்பு கேமராக்களையும் பார்வையிட முடியும்.
இதன் பயன்பாட்டை மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, 197 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 80 சதவீதம் அதாவது, 157 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் தொழில் நகரம் என்பதால், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியது அவசியம். எந்த குற்றமும் நடக்காமல் தடுக்க தான் காவல்துறை உள்ளது. அதையும் மீறி குற்றம் நடந்து விட்டால், அதில் குற்றவாளிகளை கண்டறிய, மூன்றாவது கண்ணாக சிசி-டிவி கேமராக்கள் உதவுகின்றன.
ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம், 15 வாகன திருட்டு வழக்குகள், வீடு புகுந்து திருடிய இரு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள், அலாரம் போன்றவற்றை வைக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், பயிற்சி டி.எஸ்.பி., பிரதீப், சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.