Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சிறுவர்கள் ஓட்டிய 11 பைக் பறிமுதல்பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் ஓட்டிய 11 பைக் பறிமுதல்பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் ஓட்டிய 11 பைக் பறிமுதல்பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் ஓட்டிய 11 பைக் பறிமுதல்பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

ADDED : மார் 20, 2025 01:28 AM


Google News
சிறுவர்கள் ஓட்டிய 11 பைக் பறிமுதல்பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரில், சமீப காலமாக, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சாலைகளில் லைசென்ஸ் இல்லாமல் பைக்குகளில் பறப்பது அதிகரித்துள்ளது.

பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கடைவீதி, மஜீத்தெரு, போலீஸ் ஸ்டேஷன், நான்குரோடு உள்ளிட்ட இடங்களில் பைக்கில், 4 பேர் வரை அமர்த்திக் கொண்டு சாலைகளில் மின்னல் வேகத்தில் பஞ்சாய் பறக்கின்றனர். அத்துடன் பைக்கில் சாகச பயணம் செய்வது பார்ப்பவர்களை பதற வைக்கின்றனர். இவர்கள் எதிரே வரும் வாகனத்தை பொருட்படுத்துவதில்லை. எந்த இடத்திலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதும் இல்லை.

இதுபோன்ற சிறுவர், மாணவர்களால் சாலையில் விதிமுறைகளை கடைப்பிடித்து குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் இதர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து ஒதுங்கி ஓட வேண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று, அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ., சக்திவேல் ஆகியோர், கச்சேரிமேடு, நான்கு ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் வாகனத்தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, வேகமாக பைக் ஓட்டி வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்து, அரூர் ஸ்டேஷனுக்கு போலீசார் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்த போலீசார், அவர்களிடம் சிறுவர்கள் ஓட்டுவதற்கு பைக் கொடுக்கக்கூடாது. மீறி வழங்கினால், பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என, எச்சரித்து அனுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us