/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வெட்காளி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்வெட்காளி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்
வெட்காளி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்
வெட்காளி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்
வெட்காளி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்
ADDED : ஜூன் 03, 2024 07:18 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த சின்னமுத்துார் கம்பளிகாரன் தெருவில் அமைந்துள்ள வெட்காளி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சின்னமுத்துார், கம்பளிகாரன் தெரு, கோவில் கொட்டாய், மோட்டுகொல்லகொட்டாய், சகாதேவன்கொட்டாய், டேம் ரோடு, சுண்டேகுப்பம், துவாரகாபுரி, கே.ஆர்.பி., அணை, பெரியமுத்துார் உள்ளிட்ட, 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், கே.ஆர்.பி., அணை கூட்ரோடு அருகிலுள்ள சுண்டேகுப்பம் ராதா ருக்குமணி கோவிலில் இருந்து, 1,008 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று, அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
அப்போது, குரு ராமமூர்த்தி சுவாமி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சின்னமுத்துார் நாட்டாண்மைதாரர்கள், ஊர்கவுண்டர்கள், நடுமுத்துார் ஊர்கவுண்டர்கள் செய்திருந்தனர்.