ADDED : மார் 26, 2025 01:38 AM
பல்நோக்கு கட்டடம் திறப்பு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், தும்மனப்பள்ளி பஞ்., உட்பட்ட சானமங்கலம் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினார். ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, நாகேஷ், துணை செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.