Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது

பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது

பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது

பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது

ADDED : ஜூலை 06, 2024 06:43 AM


Google News
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு பஸ் டிப்போ எதிரே, தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கடந்த ஜன.,20ல் பணியில் இருந்த ஊழியரை கட்டி போட்டு, 50 லிட்டர் டீசல், 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்-றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் தன்னை கட்டி போட்டது போல் நாடகமாடி, 5 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

பெட்ரோல் பங்க் ஊழியர் உட்பட இருவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பென்சுபள்ளியை சேர்ந்த கிரிஷ், 22, கவுதாளத்தை சேர்ந்த அசோக்ராஜ், 19, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தினேஷ்-குமார், 19, ஆகியோரை தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us