ADDED : மார் 12, 2025 07:57 AM
வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்-பத்தில், ரேஷன் கடை கட்டடம் சேதமாகி இருந்தது. இதனால் மழை காலங்களில், ரேஷன் பொருட்கள் மழை நீரில் நனைந்து வீணாகி வந்தது. புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, கடந்த ஆண்டு வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி கட்டடத்தை திறந்து வைத்து, 200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.