/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
ADDED : ஜூலை 03, 2024 07:52 AM
ஓசூர் : ஓசூர் மலை மீது, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு, ஓசூர் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் ராமாயணம், மஹா-பாரதம் மற்றும் தமிழகத்தில் உள்ள கோவில்களின் தல வரலாறு உட்பட பல்வேறு விதமான ஆன்மிக புத்தகங்களை விற்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் ஒரு வாரத்திற்குள் ஸ்டால் அமைத்து, புத்தகங்களை விற்க அறிவுறுத்தியுள்ளது. அதனால், ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம், ஸ்டால் அமைப்பதற்-கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், கிருஷ்-ணகிரி கன்னம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோவில், காட்டுநா-யனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய கோவிலிலும் ஸ்டால்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.