/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு
ADDED : மார் 18, 2025 02:03 AM
எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி அடுத்த சென்னசந்திரத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. குருபரப்பள்ளி போலீசார், எருதுவிடும் விழாவை நடத்திய தனபால், 39, சதீஷ்குமார், 30, கணபதி, 34, கார்த்திக், 35, நாகராஜ், 50 ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதே போல குருபரப்பள்ளி அடுத்த வீரோஜிபள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக நெடுமருதி அருகே வீரோஜிபள்ளியை சேர்ந்த நரோஜி ராவ், 46, ரங்கப்பா ராவ், 30, உதயகுமார், 33 ஆகிய, 3 பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
மகராஜகடை அடுத்த தங்காடிகுப்பத்தில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக அந்த ஊரை சேர்ந்த நாகராஜ், 49, சிவசங்கர், சக்திவேல், கோவிந்தராஜ், கோபி, மகேந்திரன் ஆகிய, 6 பேர் மீது மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்தனர்.