ADDED : மார் 21, 2025 01:27 AM
ஊராட்சி பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், 9வது வார்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நுாற்றாண்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை தேன்மொழி வரவேற்றார். ஆசிரியை அஞ்சலை ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி நுாற்றாண்டு சிறப்புகள் குறித்து, தலைமை ஆசிரியை அருள்மொழி விளக்கினார்.