/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பேட்டராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா பேட்டராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா
பேட்டராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா
பேட்டராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா
பேட்டராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா
ADDED : மார் 18, 2025 02:06 AM
பேட்டராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா
பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவக்கம்தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தர்யவள்ளி சமேத பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நேற்று பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
முன்னதாக கோவிலை சுற்றில் பால்கம்பத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அர்ச்சகர்கள் பூஜை செய்து, தேர்கட்டும் பணிக்கு, பால்கம்பம் நட்டனர். தொடர்ந்து, பேட்டராய சுவாமி மற்றும் பத்மாவதி தாயார் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் நாகேஷ், அ.தி.மு.க., நகர செயலாளர் ஜெயராமன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர்
நாராயணன், கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் வேல்ராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.அடுத்த மாதம், 9ல், ராமபானம், 10ல் தேரோட்டம், 11ல், பல்லக்கு மற்றும் வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 10ல் நடக்கும் தேரோட்டத்தில், தமிழக எல்லை கிராம மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் வருவர் என்பதால், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில்,
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.