ADDED : மார் 18, 2025 02:03 AM
தேனீக்கள் கொட்டி முதியவர் பலி
ஓசூர்:ஓசூர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, தேர்ப்பேட்டையிலுள்ள மலை அடிவாரத்தில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தாசரஹள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், 75, என்பவர் கடை போட்டு, உப்பு, மிளகு, தேங்காய் போன்றவற்றை விற்றார்.
கடந்த, 13 மாலை, 5:00 மணிக்கு, சாலையோர மரத்திலிருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள், வெங்கடேசன் உட்பட மொத்தம், 22 பேரை கொட்டின. இதில் படுகாயமடைந்த அவரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கடந்த, 15ல் இரவு உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.