/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தளி யூனியன் ஆபீசை பெண்கள் முற்றுகை தளி யூனியன் ஆபீசை பெண்கள் முற்றுகை
தளி யூனியன் ஆபீசை பெண்கள் முற்றுகை
தளி யூனியன் ஆபீசை பெண்கள் முற்றுகை
தளி யூனியன் ஆபீசை பெண்கள் முற்றுகை
ADDED : மார் 12, 2025 07:56 AM
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், தாரவேந்திரம் பஞ்., அரப்பள்ளி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்-கின்றன. இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் போர்வெல் வறண்டது. பஞ்., நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் செய்தும் பயனில்லை.
அப்பகுதியில் மற்றொரு போர்வெல் இருந்தும், மோட்டார் இன்றி தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை. மக்கள் விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. நேற்று தளி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற பெண்கள், காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடு-பட்டனர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி-யதால், மக்கள் கலைந்து சென்றனர்.