Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'

'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'

'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'

'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'

ADDED : ஜூலை 03, 2024 07:51 AM


Google News
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று மாலை, கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்-குழு சார்பில், 'ராக்கிங்' தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்த-ரங்கம் நடந்தது. கல்லுாரி பேராசிரியை வள்ளிசித்ரா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய்பிரியா பேசியதா-வது: மகளிர் தற்போது பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். முந்தைய பெண் சந்ததிகள் உங்கள் அளவிற்கு கல்வி பயின்றவர்களாக இல்லை. தற்போது கல்வியின் முக்கியத்-துவம் வளர்ந்துள்ளது. உங்களை படிப்பதற்கு மட்டுமல்ல, அதையும் தாண்டி, உங்கள் வாழ்வில் பல்வேறு அனுபவங்களை பெற அனுப்பி உள்ளனர். கல்லுாரியில் முதலாமாண்டு படிக்க வரும் மாணவியரை மற்ற மாணவியர் அன்போடு அரவணைக்க வேண்டும்.

'ராக்கிங்' என்பது ஒருவரை துன்புறுத்துவது மட்டுமல்ல. மனத-ளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்-துமே, 'ராக்கிங்' வகையில் சேரும். அதை உணர வேண்டும். புதிய மாணவிரை நீங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை என்-றாலும், அச்சப்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அது போன்ற நிகழ்வுகள் நடந்தால், மாவட்ட சட்டப்பணிகள் குழு-வுக்கோ, கல்லுாரி நிர்வாகத்திற்கோ உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர், பேராசிரியைகள், மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us