/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ராமேஸ்வரம் முதல் காசி வரை 24 சாதுக்கள் பாத யாத்திரை ராமேஸ்வரம் முதல் காசி வரை 24 சாதுக்கள் பாத யாத்திரை
ராமேஸ்வரம் முதல் காசி வரை 24 சாதுக்கள் பாத யாத்திரை
ராமேஸ்வரம் முதல் காசி வரை 24 சாதுக்கள் பாத யாத்திரை
ராமேஸ்வரம் முதல் காசி வரை 24 சாதுக்கள் பாத யாத்திரை
ADDED : மார் 28, 2025 01:23 AM
ராமேஸ்வரம் முதல் காசி வரை 24 சாதுக்கள் பாத யாத்திரை
கிருஷ்ணகிரி:தேவகோட்டை திருச்செந்துார் பாத யாத்திரை குழு டிரஸ்ட் சார்பில், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, ஏழாம் குழுத்தலைவர் சோமசுந்தரம் தலைமையில், 24 சாதுக்கள், ராமேஸ்வரம் முதல் காசி வரை, 2,500 கி.மீ., பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த, 3 காலை, 7:00 மணிக்கு, ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஏகாந்த ராமர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேவகோட்டை, மாத்துார், வலையபட்டி, சேலம் வழியாக கடந்த, 25ல் தர்மபுரி வந்தடைந்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு நேற்று, கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் சென்றனர்.
தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கங்கை சமவெளி என, 7 மாநிலங்கள், 40 நதிகளை கடந்து, 117 நாட்கள் நடந்து, 118வது நாளான ஜூன், 28 அன்று, காசி விஸ்வநாதர் கோவிலை சென்றடைய உள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த, 1983ல் முதல், 2018 வரை, 7 ஆண்டிற்கு ஒரு குழு என, இதுவரை, 6 குழுக்கள் பாதயாத்திரை சென்றுள்ளனர். தற்போது இவர்கள், 7வது குழுவாக பாதயாத்திரை செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதுக்களின் பாதுகாப்பு கருதி, ஒரு ஆம்புலன்ஸ், இவர்களை தொடர்ந்து செல்கிறது. மேலும், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்புக்காக இவர்களுடன் செல்கின்றனர்.