Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விபத்தில் சிக்கிய சொகுசு காரில்290 கிலோ புகையிலை பொருட்கள்

விபத்தில் சிக்கிய சொகுசு காரில்290 கிலோ புகையிலை பொருட்கள்

விபத்தில் சிக்கிய சொகுசு காரில்290 கிலோ புகையிலை பொருட்கள்

விபத்தில் சிக்கிய சொகுசு காரில்290 கிலோ புகையிலை பொருட்கள்

ADDED : மார் 14, 2025 01:34 AM


Google News
விபத்தில் சிக்கிய சொகுசு காரில்290 கிலோ புகையிலை பொருட்கள்

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே, அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளான சொகுசு காரில், 290 புகையிலை பொருட்கள் சிக்கியது. இது தொடர்பாக, 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், முருக்கம்பட்டி அடுத்த கே.மோட்டூரை சேர்ந்தவர் மணிவேல், 46, அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி பஸ் ஓட்டிச்சென்றார். ஜெண்டமேடு அருகில், பஸ்சை ஓட்டி சென்றபோது எதிரில் வந்த டாடா அல்டிஸ் சொகுசு கார், பஸ் மீது மோதியது. அப்போது, கார் டிரைவர் கீழே குதித்து தப்பினார்.

இது குறித்து, பஸ் டிரைவர் மணிவேல், ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விபத்துக்குள்ளான காரை சோதனையிட்டதில், 290 கிலோ புகையிலை பொருட்கள் கடத்த முயன்றது தெரிந்தது.

விசாரணையில், அக்கார் சென்னை பதிவு எண் கொண்டது என்பதும், காரில் டிரைவருடன், மேலும் ஒரு நபர் தப்பி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து ஊத்தங்கரை போலீசார், காருடன், 290 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவ‍ரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us