/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முதல்வரிடம் நன்றி தெரிவித்தஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., முதல்வரிடம் நன்றி தெரிவித்தஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
முதல்வரிடம் நன்றி தெரிவித்தஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
முதல்வரிடம் நன்றி தெரிவித்தஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
முதல்வரிடம் நன்றி தெரிவித்தஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ADDED : மார் 18, 2025 02:05 AM
முதல்வரிடம் நன்றி தெரிவித்தஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ஓசூர்:தமிழக அரசின் பட்ஜெட்டில், ஓசூரில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், உயர்தர அலுவலக வசதிகளுடன், 400 கோடி ரூபாய் மதிப்பில், டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஓசூர் மாநகரத்தை ஒட்டி, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் அறிவு சார் பெருவழித்தடம், தளி அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் வெளியாகின.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியுடன் சென்று, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், 3 அறிவிப்புகளை வழங்கியதற்கு, முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.