/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கூட்டத்தில் தீர்மானம்கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கூட்டத்தில் தீர்மானம்
கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கூட்டத்தில் தீர்மானம்
கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கூட்டத்தில் தீர்மானம்
கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜூன் 19, 2024 10:31 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தக்காளி மண்டியில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, துணை செயலாளர் சந்திரசேகர், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் தணிக்காசலம் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராமகவுண்டர், தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், அடுத்த மாதம், 5ல் கிருஷ்ணகிரியில் நடக்கும் உழவர் தின பேரணியில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அழியாளம் என்ற இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். வன விலங்குகளால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் நிவாராண தொகையை அதிகரிக்க வேண்டும்.
விவசாயிகள் கொண்டு செல்லும் காய்கறி லோடு வாகனங்களுக்கு, டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருள்களை, தடையின்றி ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.ஆர்.பி., அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சரவணன், துணைத்
தலைவர் நசீர் அகமத் உட்பட பலர் பங்கேற்றனர்.