/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானைசாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானை
சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானை
சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானை
சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானை
ADDED : ஜூன் 19, 2024 10:27 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையின் இருபுறம் காப்புக்காடுகள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை, சாலையில் முகாமிடுவது வழக்கம். திடீரென சாலைக்கு வரும் யானையை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைவார்கள்.
அதேபோல், நேற்று காலை அஞ்செட்டி சாலையில் ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிந்தது. அப்போது அவ்வழியாக வந்த காரை, ஆக்ரோஷமாக விரட்டியது. கார் டிரைவர் சாமர்த்தியமாக காரை பின்நோக்கி ஓட்டி சென்று உயிர் தப்பினார். அதேபோல், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை ஒற்றை யானை அச்சுறுத்தியதால் பீதியடைந்தனர். நீண்ட நேரம் சாலையில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை, ஆக்ரோஷமாக பிளிறியபடி வனப்பகுதி நோக்கி சென்றது. அதன் பின் அவ்வழியாக அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணித்தனர்.