/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு கட்டி கொடுத்த வீடுகளுக்கு பாதை கேட்டுகுடியிருப்போர் கறுப்பு கொடி போராட்டம் அரசு கட்டி கொடுத்த வீடுகளுக்கு பாதை கேட்டுகுடியிருப்போர் கறுப்பு கொடி போராட்டம்
அரசு கட்டி கொடுத்த வீடுகளுக்கு பாதை கேட்டுகுடியிருப்போர் கறுப்பு கொடி போராட்டம்
அரசு கட்டி கொடுத்த வீடுகளுக்கு பாதை கேட்டுகுடியிருப்போர் கறுப்பு கொடி போராட்டம்
அரசு கட்டி கொடுத்த வீடுகளுக்கு பாதை கேட்டுகுடியிருப்போர் கறுப்பு கொடி போராட்டம்
ADDED : மார் 21, 2025 01:27 AM
அரசு கட்டி கொடுத்த வீடுகளுக்கு பாதை கேட்டுகுடியிருப்போர் கறுப்பு கொடி போராட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த எர்ரண்டப்பள்ளி கிராமத்தில், பட்டியலின சமூக மக்களுக்கு கடந்த, 1980ல், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், 25 வீடுகள் கட்டி, பட்டாவும் வழங்கப்பட்டன. தற்போது, 2வது தலைமுறையினர் இந்த வீடுகளில் வசித்து வரும் நிலையில், இந்த குடியிருப்புகளுக்கு பாதை உருவாக்காமலேயே வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேல் மற்றவர்களின் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர்கள் தற்போது சுற்றுச்சுவர் அமைத்து விட்டதால், 30 குடும்பத்தினர் பாதையின்றி வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று சூளகிரி தாலுகாவில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு பாதை கேட்டும், கலெக்டர் அப்பகுதி மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்க வேண்டும் என்றும், குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.