/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கட்டிகானப்பள்ளியை கிருஷ்ணகிரி நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனுகட்டிகானப்பள்ளியை கிருஷ்ணகிரி நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனு
கட்டிகானப்பள்ளியை கிருஷ்ணகிரி நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனு
கட்டிகானப்பள்ளியை கிருஷ்ணகிரி நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனு
கட்டிகானப்பள்ளியை கிருஷ்ணகிரி நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனு
ADDED : ஜூன் 19, 2024 10:26 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியுடன், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் தேசிய ஊரக திட்டத்தில் பணிபுரிவோர் உட்பட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்டிகானப்பள்ளி பஞ்.,ல் உள்ள சிற்றுார்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும், விவசாயம் சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, 2,000க்கும் மேற்பட்ட பெண்கள், 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வருகிறோம்.
இந்நிலையில், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தை, நகராட்சியுடன் இணைக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகராட்சியுடன் எங்கள் கிராமங்கள் இணைக்கப்பட்டால், ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள், கிராமபுற மக்களுக்கு கிடைக்க கூடிய பல்வேறு சலுகைகள் கிடைக்காமல் போகும். எனவே, கட்டிகானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.