/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது
டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது
டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது
டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது
ADDED : ஜூன் 03, 2025 01:04 AM
கரூர், கரூர் அருகே, டாஸ்மாக் மதுபான கடை கேஷியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; செல்லாண்டிப்பாளையம் டாஸ்மாக் மதுபான கடையில், கேஷியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 31 இரவு திருமா
நிலையூர் ரவுண்டானா பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரூர் ராயனுார் பகுதியை சேர்ந்த கவுதமன், 28; என்பவர் டூவீலரில் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலமுருகனிடம் இருந்து, 500 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து, பாலமுருகன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார், கவுதமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.