/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 05, 2024 12:57 AM
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், அரசு ஆதிதிராவிடர் நல சின்னமநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளியில், காலியாக உள்ள 1 இடைநிலை ஆசிரியர் பணியிடம், கே.பேட்டை தொடக்கப்பள்-ளியில் காலியாக உள்ள 1 இடைநிலை ஆசிரியர் பணியிடம் மற்றும் கீழவெளியூர் தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள 1 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்-தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில், காலி-யாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தமிழ் பட்டதாரி, சமூக அறிவியல் பட்டதாரி, கோட்டமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் பட்டதாரி, நந்தன்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் ஆங்-கிலம், சமூக அறிவியல், மாவத்துார் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்.நெய்தலுார் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர், தெலுங்கப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர்-, சணப்பிரட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர்-, ஆகியவற்றிக்கு ஆசிரியர் தகுதித்-தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் நேரடியாக, தபால் மூலமா-கவோ, ஜூலை, 9க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், முதல் தளம், அறை எண் 114, கரூர் என்ற முகவ-ரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.