/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்' 'அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்'
'அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்'
'அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்'
'அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்'
ADDED : ஜூன் 22, 2025 01:26 AM
கரூர், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுகிறது. இதில், புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல், கோட்டமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம், மாவத்துார் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் அறிவியல், நெய்தலுார் பள்ளியில் ஆங்கிலம், நந்தக்கோட்டை பள்ளியில், ஆங்கிலம்,சமூக அறிவியல்.
மேலும், சணப்பிரட்டி பள்ளியில் ஆங்கிலம் சமூக அறிவியல், திருக்காம்புலியூர் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) எம்.காம்., பி.எட்., மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பி.ஏ., பி.எட்., பி.எஸ்.சி., பி.எட்., கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும், 24 முதல், 26க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கலெக்டர் வளாகம், முதல் தளம், அறை எண்.114, கரூர் - 639007 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.