/உள்ளூர் செய்திகள்/கரூர்/உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கைெயழுத்து இயக்கம்உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கைெயழுத்து இயக்கம்
உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கைெயழுத்து இயக்கம்
உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கைெயழுத்து இயக்கம்
உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கைெயழுத்து இயக்கம்
ADDED : செப் 11, 2025 01:28 AM
கரூர், கரூர் மாவட்ட மன நல திட்டம், மாவட்ட காவல் துறை சார்பில், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.
அதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் வித்யாவதி, பிளக்ஸ் பேனரில் கையெழுத்து போட்டு, விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு தற்கொலையை தடுப்பது, தவிர்ப்பது குறித்தும், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் தற்காத்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் கொண்ட, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பொதுமக்களும், பிளக்ஸ் பேனரில் கையெழுத்து போட்டனர். மன நல டாக்டர் பாரதி சாந்தினி, மன நல அலுவலர் மனோஜ், ரோட்டரி கிளப், சாந்தி வன மன நல காப்பக நிர்வாகிகள் பங்கேற்றனர்.