/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகளிர் சுயஉதவி குழு பொருட்கள் கண்காட்சி நாளை முதல் துவக்கம் மகளிர் சுயஉதவி குழு பொருட்கள் கண்காட்சி நாளை முதல் துவக்கம்
மகளிர் சுயஉதவி குழு பொருட்கள் கண்காட்சி நாளை முதல் துவக்கம்
மகளிர் சுயஉதவி குழு பொருட்கள் கண்காட்சி நாளை முதல் துவக்கம்
மகளிர் சுயஉதவி குழு பொருட்கள் கண்காட்சி நாளை முதல் துவக்கம்
ADDED : மே 22, 2025 01:51 AM
கரூர், மகளிர் சுயஉதவி குழுக்களின், உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நாளை முதல் தொடங்குகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாநகராட்சி
மாவடியான் துவக்கப்பள்ளியில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நாளை முதல் (23ம் தேதி) வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் கைவினைப்பொருட்கள், அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள், மெத்தை, தலையணை, போர்வை.
ரெடிமேட் ஆடைகள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொம்மைகள், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு பொருட்கள், சூப் பொடி வகைகள், தொக்கு வகைகள், ஊறுகாய் வகை
கள், குளியல் சோப்பு, உள்பட பல வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. கரூர் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.