/உள்ளூர் செய்திகள்/கரூர்/பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:40 AM
குளித்தலை, தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க கோரி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., குண்டாங்கல்பாறை, புத்தர் நகரில் வசிக்கும் பொது மக்களுக்கு, கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. அப்பகுதி மக்கள் தட்டுப்பாடு இல்லாமல், குடிநீர் வழங்க வேண்டும் என பலமுறை குளித்தலை யூனியன் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை, 4:00 மணியளவில் குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் பகுதியில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை யூனியன் கமிஷனர் விஜயகுமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்கப்படும் என, உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்கு
வரத்து பாதிக்கப்பட்டது.