ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
கரூர்: சின்னதாராபுரம் அருகே, துாங்கி கொண்டிருந்த பெண்ணை, பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் மோளையன்பட்டி பகுதியை சேர்ந்த பழனியாண்டி என்பவரது மனைவி மரகதம், 52; இவர் நேற்று முன்தினம் மதியம், மருமகன் ராமசாமி, 48, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்த மரகதம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, ராமசாமி கொடுத்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.