ADDED : செப் 05, 2025 01:29 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே பாகநத்தம், வெடிக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துவேல் மனைவி மதுபாலா, 35. இவர், புத்தாம்பூரிலிருந்து பாகாநத்தம் செல்லும் சாலையில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடலுார் மாவட்டம், பண்ருட்டி
அருகே உள்ள சிவன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா, 49, என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, மதுபாலா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.