/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தி.மு.க., கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது தி.மு.க., கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது
தி.மு.க., கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது
தி.மு.க., கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது
தி.மு.க., கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது
ADDED : மே 24, 2025 01:39 AM
கரூர், கரூர் அருகே, தி.மு.க., பெண் கவுன்சிலரை மிரட்டி, சின்டெக்ஸ் தொட்டியை சேதப்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புகழூர் செம்மடை முதல் தெரு பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரது மனைவி தனலட்சுமி, 55; இவர், வீட்டுக்கு அருகில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான, பொது குழாய் தண்ணீரை, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால், அந்த பகுதியில்
சின்டெக்ஸ் தொட்டி புதிதாக வைக்கப்பட்டு, மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய, நகராட்சி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டியை கடந்த, 21ல் தனலட்சுமி சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து புகழூர் நகராட்சி, 23வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் ராமு, 56, தட்டி கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த தனலட்சுமி, தி.மு.க., பெண் கவுன்சிலர் ராமுவை மிரட்டியுள்ளார். இதையடுத்து, பெண் கவுன்சிலர் ராமு, கொடுத்த புகார்படி தனலட்சுமியை, வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.