சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது
சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது
சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது
ADDED : செப் 10, 2025 01:18 AM
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அருகே, மது விற்ற பெண் கைது செய்யப்பட்டு, 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சின்னதாராபுரம் போலீசார், நஞ்சைக்
காளிக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வீட்டின் பின்புறம், மது விற்பனையில் ஈடுபட்ட நஞ்சைக்
காளிக்குறிச்சி பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி சின்னப்பொண்ணு, 55, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.