/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேர்தலுக்கு முன் க.பரமத்தி பஞ்., யூனியன் பிரிக்கப்படுமா?தேர்தலுக்கு முன் க.பரமத்தி பஞ்., யூனியன் பிரிக்கப்படுமா?
தேர்தலுக்கு முன் க.பரமத்தி பஞ்., யூனியன் பிரிக்கப்படுமா?
தேர்தலுக்கு முன் க.பரமத்தி பஞ்., யூனியன் பிரிக்கப்படுமா?
தேர்தலுக்கு முன் க.பரமத்தி பஞ்., யூனியன் பிரிக்கப்படுமா?
ADDED : ஜூன் 01, 2024 06:20 AM
கரூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனை, இரண்டாக பிரித்து, சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய யூனியனை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில், எட்டு பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. அதில், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனில் அதிகமாக, 30 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. 500 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அடங்கியுள்ளன. இதனால், மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை, கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், 30 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள், க.பரமத்தியில் உள்ள, யூனியன் அலுவலகத்துக்கு, 15 கி.மீ., துாரம் முதல் 25 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனை, இரண்டாக பிரிக்க வேண்டும் என, 15 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:தமிழகத்தில் பஞ்., யூனியன்களுக்கு கடந்த, 2019 டிச.,ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதன் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், க.பரமத்தி பஞ்., யூனியனில், சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய யூனியன் அமைக்க பல ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதிய யூனியனில் சின்னதாராபுரம், கூடலுார், தென்னிலை, சூடாமணி, நஞ்சை காளக்குறிச்சி, எலவனுார் உள்ளிட்ட, 15 பஞ்சாயத்துக்களை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதை நிறைவேற்றாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்.தொலைதுாரத்தில் வசிக்கும் கிராம பஞ்சாயத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன், சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய யூனியனை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.