/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிடப்பில் குடிநீர் வடிகால் வாரிய பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் கிடப்பில் குடிநீர் வடிகால் வாரிய பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம்
கிடப்பில் குடிநீர் வடிகால் வாரிய பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம்
கிடப்பில் குடிநீர் வடிகால் வாரிய பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம்
கிடப்பில் குடிநீர் வடிகால் வாரிய பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : செப் 15, 2025 01:59 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, 7வது வார்டில், ஆறு மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அரவக்குறிச்சி, 7வது வார்டில் அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் வரை, 10 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டது. கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வந்ததால் தார்ச்சாலை சேதமடைந்து காணப்பட்டது. மழைக்
காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டனின் சொந்த வார்டான, 7வது வார்டில் இதுபோல சாலை பழுதடைந்து காணப்பட்டதால் இப்பகுதி பொதுமக்கள் சாலையை சரி செய்து தர பலமுறை கோரிக்கை வைத்தனர். பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை துவங்கினர். இப்பணிக்காக சாலை முழுவதும் குழிகள் தோண்டப்பட்டு, பல்வேறு இடங்களில் அக்குழிகள் தற்போது வரை மூடப்படாமல் உள்ளது.
மேலும், சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், இவ்வழியாக எவ்வித வாகனங்களும் செல்ல முடியாத நிலையும் உள்ளது. குடியிருப்பு வாசிகள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளி பேருந்தில் ஏற்றி விட, ஒரு கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்று பள்ளி பேருந்தில் ஏற்றி விடுகின்றனர்.
இதனால், தினசரி வேலைகள் பாதிக்கப்படுவதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். கடந்த, ஆறு மாதத்திற்கும் மேலாக இதே நிலை நீடித்து வருவதால் வேதனையின் உச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். முடக்கப்பட்டுள்ள பணியை பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி செயலர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.