/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வேண்டும் அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வேண்டும்
அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வேண்டும்
அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வேண்டும்
அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வேண்டும்
ADDED : மே 11, 2025 12:59 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, கொத்தப்பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரை பார்த்து ரசிக்கவும், அணையில் குளிக்கவும் ஆண், பெண், சிறுவர், இளைஞர்கள் என, ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆர்வக்கோளாறு காரணமாக, குளிப்பவர்களில் சிலர் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் தடுப்பணையில் தண்ணீர் திறந்து
விடும்போதும், பெரும்பாலும் ஒரு உயிரிழப்பாவது நடந்து விடுகிறது. இதில், இளைஞர்களே அதிகம்.
எனவே, உயிரிழப்பை தடுக்க, வரும் மழைக்காலத்திற்குள், பொதுமக்களின் நலன் கருதி விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைக்க, அரவக்குறிச்சி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.