ADDED : ஜூன் 26, 2025 01:42 AM
கரூர், புன்னம் சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆனி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்காரம் நடந்தது.
பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஆனி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், தலையூர் மாரியம்மன் கோவில், புகழூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், திருகாடுதுறை மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில்களிலும், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளானோர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு அபி ேஷகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. சிந்தலவாடி சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* க.பரமத்தி அடுத்த குப்பம் பஞ்சாயத்தில் உள்ள, உப்புபாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. நேற்று அமாவாசையை முன்னிட்டு, வீரமாத்தியம்மன், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.