/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 11:55 AM
கரூர்: தமிழ்நாடு அனைத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை கண்டித்தும், மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் அதிகம் உள்ள கிராமங்களை பிரித்து, புதிய கிராமங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் அழகிரிசாமி, ராஜேந்திரன், ராஜன்சேதுபதி, கிருஷ்ணகுமார், மோகனரங்கன், சுரேஷ், சந்தான கிருஷ்ணன், அருள்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
குளித்தலையில் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அரவக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு வட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் நாகமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.