/உள்ளூர் செய்திகள்/கரூர்/வந்தே பாரத் ரயில் கரூரில் நிற்காதது அநீதி: கரூர் எம்.பி.,ஜோதிமணி பேட்டிவந்தே பாரத் ரயில் கரூரில் நிற்காதது அநீதி: கரூர் எம்.பி.,ஜோதிமணி பேட்டி
வந்தே பாரத் ரயில் கரூரில் நிற்காதது அநீதி: கரூர் எம்.பி.,ஜோதிமணி பேட்டி
வந்தே பாரத் ரயில் கரூரில் நிற்காதது அநீதி: கரூர் எம்.பி.,ஜோதிமணி பேட்டி
வந்தே பாரத் ரயில் கரூரில் நிற்காதது அநீதி: கரூர் எம்.பி.,ஜோதிமணி பேட்டி
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கரூர்: ''கரூர் ரயில்வே ஸ்டேஷனில் வந்தே பாரத் ரயில் நிற்காதது அநீதி,'' என, காங்.,எம்.பி.,ஜோதிமணி தெரிவித்தார்.கரூர் எம்.பி., அலுவலகத்தில், கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், எம்.பி., ஜோதிமணி பங்கேற்ற பின், நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா கூட்டத்தொடரில், எங்களது கூட்டணி எம்.பி.,க்கள் நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம். மேற்கு வங்காளத்தில் நடந்த ரயில் விபத்து, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசின் நிர்வாக கோளாறு காரணமாக ரயில் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில், கரூரில் நிற்காது என ரயில்வே துறை தெரிவித்திருப்பது, கரூர் மாநகருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கரூருக்கு வழங்காமல் ஏமாற்றியது; தற்போது வந்தே பாரத் ரயில் கரூரில் நின்று செல்லாது என, ரயில்வே நிர்வாகம் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, 100 நாள் வேலை வழங்காமல் நிறுத்தி வைக்கக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.