/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தக்காளி லோடு ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து தக்காளி லோடு ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
தக்காளி லோடு ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
தக்காளி லோடு ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
தக்காளி லோடு ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : ஜூன் 09, 2025 04:40 AM
கரூர்: கரூர் அருகே, தக்காளி லோடு ஏற்றிச்சென்ற வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன், 40; டிரைவர். இவர், நேற்று காலை, 'அசோக் லேலேண்ட் தோஸ்த்' வேனில், தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டார்.
கரூர் அருகே, மதுரை தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில், வேன் சென்று கொண்டிருந்தபோது, பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால், வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில், வேனில் சிக்கி கொண்டு தவித்த டிரைவர் அர்ஜூனை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டனர். தக்காளி பெட்டிகள் சாலையில் சிதறி கிடந்தன. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று வேன் மற்றும் தக்காளி பெட்டிகளை அப்புறப்படுத்தினர். இதனால், கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.