/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசின் சாதனைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வலியுறுத்தல் அரசின் சாதனைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்
அரசின் சாதனைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்
அரசின் சாதனைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்
அரசின் சாதனைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்
ADDED : ஜூன் 30, 2025 04:02 AM
கரூர்: ''அரசின் சாதனைகளை விளக்கி, உறுப்பினர் சேர்க்கையை மேற்-கொள்ள வேண்டும்,'' என, தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேசினார்.
கரூரில், தி.மு.க.,சார்பில் பி.எல்.ஏ.,2, பி.டி.ஏ., மற்றும் ஓட்டுச்-சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சி மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில், 1,055 ஓட்டுச்சாவடிகளில் நேரடியாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். ஒரு நாளைக்கு, 15 வீடுகள் வீதம் சென்றால், 20 நாட்களில் உறுப்பினர் சேர்க்-கையை முடிக்க முடியும்.
எந்த பாகுபாடும் பார்க்காமல், நேரடியாக வீடுகளுக்கு சென்று அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை கொடுத்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள
வேண்டும். மேலும், சேர்க்கை படிவத்தில் உள்ள கேள்விகளை பூர்த்தி செய்ய வேண்டும். மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்-வாகி வரை, உறுப்பினர் சேர்க்கையை முழுமையாக
ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
கரூர் மாநகராட்சிக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்-டுள்ளது. தற்போது பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்க-ளுக்கு, பெற்று தர முயற்சி செய்ய வேண்டும். நிதி வழங்க மறுப்பு உள்பட, மத்திய அரசால் பல்வேறு தாக்குதல்களை எதிர்-கொண்டு, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகர பகுதி செயலாளர்கள் ராஜா, சுப்பிரமணி, கணேசன், ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.