/உள்ளூர் செய்திகள்/கரூர்/'துவரை, நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டில் விண்ணப்பிக்கலாம்''துவரை, நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டில் விண்ணப்பிக்கலாம்'
'துவரை, நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டில் விண்ணப்பிக்கலாம்'
'துவரை, நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டில் விண்ணப்பிக்கலாம்'
'துவரை, நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டில் விண்ணப்பிக்கலாம்'
ADDED : ஜூலை 10, 2024 06:56 AM
கரூர்: துவரை, நிலக்கடலை பயிர்களை, பிரதமர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், காரீப் பருவத்தில் துவரை, நிலக்கடலை பயிர்களுக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம்.
இதில் விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ., வழங்கும் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். பொது இ-சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள், 2 சதவீதம் மட்டும் அதாவது ஏக்கருக்கு துவரை பயிருக்கு, 288.10 ரூபாய், நிலக்கடலை பயிருக்கு, 628.37 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தலாம். வரும் செப்., 30 காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.