/உள்ளூர் செய்திகள்/கரூர்/வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் திறக்கப்படாத புதிய கழிப்பறைவெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் திறக்கப்படாத புதிய கழிப்பறை
வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் திறக்கப்படாத புதிய கழிப்பறை
வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் திறக்கப்படாத புதிய கழிப்பறை
வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் திறக்கப்படாத புதிய கழிப்பறை
ADDED : ஜூன் 28, 2024 01:14 AM
கரூர், கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியணை பஸ் ஸ்டாப் அருகில் பஞ்., அலுவலகம், அரசு பள்ளிகள் உள்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளது.
பல்வேறு பணிகள் காரணமாக ஏராளமானோர் வருகின்றனர். இங்கு வரும் மக்கள் வசதிக்காக, வெள்ளியணை பஸ் ஸ்டாப் அருகில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் திறக்கப்படாமல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் திறக்கப்படாமல் இருந்திருக்கலாம். தற்போது நடத்தை விதிகள் விலகி, 20 நாட்களுக்கு மேலான நிலையில், விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.