/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஜவஹர் பஜாரில் எரியாத சிக்னல் விளக்குகள்ஜவஹர் பஜாரில் எரியாத சிக்னல் விளக்குகள்
ஜவஹர் பஜாரில் எரியாத சிக்னல் விளக்குகள்
ஜவஹர் பஜாரில் எரியாத சிக்னல் விளக்குகள்
ஜவஹர் பஜாரில் எரியாத சிக்னல் விளக்குகள்
ADDED : பிப் 12, 2024 11:15 AM
கரூர்: கரூர் ஜவஹர் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள், பல மாதங்களாக சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகரின் இதய பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், தாலுகா அலுவலக வளாகம், வட்ட வழங்கல் அலுவலகம், கிளைச்சிறை மற்றும் தீயணைப்பு நிலையம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகள் காரணமாகவும், கிளைச்சிறையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்கள் உள்பட, நாள்தோறும் அதிகளவில் பொது மக்கள், கரூர் தாலுகா வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், கரூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள ஜவஹர் பஜாரில் ஏராளமான ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
இதனால், ஜவஹர் பஜார் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக சிக்னல் விளக்குகள் சேதமடைந்த நிலையில், எரியாமல் உள்ளது. இதனால், ஜவஹர் பஜாரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, கரூர் ஜவஹர் பஜாரில், சேதமடைந்த நிலையில் உள்ள, சிக்னல் விளக்குகளை சரி செய்ய, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பது
அவசியம்.