/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சமன் இல்லாத சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு சமன் இல்லாத சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
சமன் இல்லாத சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
சமன் இல்லாத சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
சமன் இல்லாத சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:24 AM
கரூர், சாலை சீரமைப்பு பணி நிறைவடைந்த பின், மண் சாலையோடு தார்ச்சாலை சமன்செய்யாமல் விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டிக்கு சாலை சீரமைப்பு பணி நடந்தது. பணி முடிந்தும், சாலையோர பகுதி, தரைக்கு சமம் இல்லாத நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை பணியாளர்கள் சாலையை சமன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், கனரக வாகனங்கள் வரும்போது, சாலையோரம் ஒதுங்கும்போது, தடுமாறி விழுகின்றனர். சில நேரங்களில் தடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.