ADDED : செப் 22, 2025 01:48 AM
கரூர்:கரூர் அருகே, பஞ்சமாதேவியில், பல நாட்களாக குப்பை ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் அகற்றுவது இல்லை. இதனால், சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை, காற்றில் பறந்த வண்ணம் உள்ளது.
வாகன ஓட்டிகள், நடந்து செல்கிறவர்கள் முகம் சுளித்து செல்கின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில், பஞ்சமாதேவியில் தேங்கியுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், அந்த வழியாக செல்வோருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.